ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானில் காற்றடித்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கி இருக்கின்றனர். பொய்மொ என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் தயாரித்துள்ளார்.
சூட்கேஸ் சைசில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலே தூக்கிச் செல்லலாம். மேலும் தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றுடைடிப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம். தற்போதைக்கு மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.