விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மகள் போஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் தாடி பாலாஜி துள்ளாத மனமும் துள்ளும் ,சச்சின் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் . இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் , சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ,சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார் .
மேலும் தாடி பாலாஜி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதில் இவருடன் அவர் மனைவி நித்யாவும் கலந்து கொண்டிருந்தார். இவர்கள் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . தாடி பாலாஜி – நித்யா தம்பதிக்கு போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார் . இந்நிலையில் போஷிகா அவரது தாய் நித்யாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .