Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. ஜி.பி.முத்துக்கு இப்படி ஒரு ஆசையா?….. “வேற லெவல் நீங்க” பாராட்டும் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடியூப் பக்கம் கரை ஒதுங்கினார் ‌சோசியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம்.

அதற்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது ப ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. அதன் படி தற்போது ஜி.பி முத்துவுடன் பேசும் அசீம், உங்களுக்கு என்ன வரவேண்டும் என்ன வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒரு எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவோ சூப்பர் ஸ்டார் வரை கூட ஆகலாம். எது வேண்டுமென நீங்கள் கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து ஜிபி முத்து, என்னால் முடிந்த அளவுக்கு ஒரு ஆசிரமம் வைக்கணும் டா நல்ல காரியம் செய்யணும். இங்கே 60 கேமரா இருக்கிறது என்பதை நான் நினைக்கவே மாட்டேன். என்னை தனியாக கூட்டிகிட்டு கொண்டு போய் கேட்டாலும் இதை தான் சொல்லுவேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Categories

Tech |