கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர்.
அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் கொரோனாவின் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளும் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டாலும் அவைகள் முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 2 மாதகாலம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.
இக்காரணத்தின் அடிப்படையில் முழுமையாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில் தான் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட பட்டுள்ளதாகவும், அப்படி என்றால் குறைந்தப்பட்சம் இப்படம் வெளியாகுவதற்கு 3 மாதம் வரை கூட ஆகும் என்றும் கூறப்படுகின்றது. இது சம்மந்தமாக இப்படக்குழுவினர் சார்பாக அதிகார பூர்வாமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.