Categories
மாநில செய்திகள்

அடடே!… மாஸ்டர் பிளான் போட்ட ஓ.‌பன்னீர்செல்வம்…. என்னன்னு தெரியுமா?…. செம அப்சட்டில் எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் இதுவரை நடைபெற்று சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடம் மவுனம்‌ காத்து வருகிறது. அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதால் அடிமட்ட தொண்டர்களும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் பட்டியல் இறுதி கட்டத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளின் பட்டியலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனை முறைப்படி அறிவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்கும் சுற்று பயணம் உறுதியாக நடைபெறும். திமுகவின் செயல்பாடுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கையாக வெளியிடாடுக் கொண்டிருக்கிறேன். திமுகவை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்தித்து தனது பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள்தான் உண்மையான அதிமுக என கூறி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரத்தை போட்டுள்ளனர். மேலும் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திகைப்பில் உள்ளனர்.

Categories

Tech |