விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 அமோகமாக துவங்கி உள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்பு’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல சீரியல்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் திடீரென தினேஷ் மற்றும் ரச்சிதா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய மனைவி பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளது குறித்து அவரை பிரிந்து வாழும் கணவர் தினேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரது இதயங்களை வெல்ல ரசிதாவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.