தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்காரா. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாகக் வைத்து எடுக்கப்பட்டது ஆகும்.
இந்த படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்யப்படும் நிலையில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்காரா தமிழில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து படம் எடுக்க போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா அல்லது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் ரத்தன் டாடாவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட குரு திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.