Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம சூப்பர்…. உலகின்‌ டாப் 100 பாடல்கள் பட்டியலில் NO.1 இடத்தை பெற்ற ரஞ்சிதமே….. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியானது.

தமன் இசையில் விஜய் மற்றும் மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் யூடியூப் மியூசிக் குளோபல் சார்ட்ஸ் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் 100 மியூசிக் வீடியோஸ் இடம் பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் தளபதி விஜயின் ரஞ்சிதமே பாடல் முதல் இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |