Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 14 வயதில் சொந்தமாக கார் வாங்கிய சூப்பர் சிங்கர் கப்பிஸ்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கின்ற கப்பீஸ். அந்நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் பூவையார். இவர் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் சொந்த வீடு, சொந்தக்கார் வாங்கி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது பூவையாரும் இணைந்துள்ளார். இந்நிலையில் பூவையார் சொந்த கார் வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியதை பூவையார் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 14 வயதில் கார் வாங்கி உள்ள பூவையாருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |