Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. 4 வயதில் தனது திறமைகளை அசத்தும் சிறுமி…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!!

கடலூரில் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் 87 வினாடிகள் தாவிக் கடந்து 4 வயது சிறுமி அசத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அடுத்த மணக்குடியான் கிராமத்தில் மோகன்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இதில் அனுஸ்ரீ மரக்கிளை போன்றவைகளில் நீண்ட நேரம் தொங்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் ஏறத்தாழ 87 விநாடிகள் தாவி கடந்தபடி அனுஸ்ரீ அசத்தியுள்ளார். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு 4 வயதில் சிறுமி தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |