நாக்பூரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஜெயந்தி பாய் தனது வாழ்வாதாரத்திற்காக தினசரி சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார்.
ஆகவே ஜெயந்தி பாய் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் மாலை நேரத்தில் பொரி விற்பனை செய்து வருகிறார். அதன் மூலமாக தனது வீட்டு வாடகை மற்றும் மருத்துவ செலவுகளை சிக்கல் இன்றி சமாளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் உள்ளூர் அளவில் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக இருந்து வந்த முதியவர் ஜெயந்தி பாய் தற்போது இந்த வீடியோ மூலமாக நெட்டிசன்கள் மத்தியில் பரிச்சயமாகி உள்ளார்.
https://www.instagram.com/reel/CXYxc5kFVCI/?utm_source=ig_web_copy_link