Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கலர்ஸ் தமிழில் மீண்டும் இணைந்த பிரபலம்…. எந்த சீரியல் தெரியுமா….? புதிய அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சந்திரலேகா. இந்த தொடர் வருகின்ற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மெகா தொடரின் கதையை அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் உருவாக்கி உள்ளனர். இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, டெல்லி கணேஷ், சதீஷ், பரத் கல்யாண், ராணி, காயத்ரி பிரியா, மீனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சரிகம இண்டியா லிமிட் சார்பாக பி.ஆர் விஜயலட்சுமி தயாரிக்கும் இந்த தொடரை சாய்மருது இயக்குகிறார். இதன் கதையை சரிகம இலகாகவும், திரைக்கதையை சேக்கிழார் எழுத வசனத்தை குரு சம்பத்குமார் எழுதுகிறார்.

இதனையடுத்து தந்தை கைவிட்டு போன நிலையில் இலக்கியாவின் குடும்ப தாய் மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களில் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளை போல வார்த்தைகளால் கொட்டிக் கொண்டே இருப்பாள். சிறுவயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமுனுக்காக இலக்கிய அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறார். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறார்கள். கதையின் கதாநாயகன் கௌதம் பெரிய தொழிலதிபர் அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சினை செய்கிறார். இலக்கியவிற்கு நல்ல வாழ்க்கை கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேலும் இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கை பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறார். அத்தனையும் கொடுமையில் இருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்ற போகிறாள் என்பதை “இலக்கியா” மெகா தொடர் விளக்குகிறது.

Categories

Tech |