நவரச நாயகனின் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளது. பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது கௌதம் மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதனை இருவரும் சமீபத்தில் உறுதிப்படுத்தினர். இவர்களின் திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வைத்தது. இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு நெசவு செய்யப்பட துணியால் இந்த திருமண அழைப்பிதழ் அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திருமண அழைப்பிதழ் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய நபர்கள் மற்றும் நெருங்கிய நபர்கள் வட்டாரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் கெளதம்-மஞ்சிமா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.