Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியான தகவல்…!!!

காஷ்மீரில் பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவு தேர்வுக்கான 2 1/2 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவு நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சிஎல்ஏடி நுழைவு தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 21 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏழு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டும் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பாளர் என ஆசிரியர் குழுவில் உள்ளனர். இதனையடுத்து இளைய தலைமுறையினருக்கு கல்வி கற்பதற்கு இந்திய ராணுவம் எடுத்துள்ள முயற்சிகளை ராவியாபாத் மற்றும் காசியாபாத் உள்ளூர் வாசிகள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்திய ராணுவத்துக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை முன்னேற தூண்டுவதாக இந்த திட்டங்கள் காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கல்வியை மேம்படுத்த உதவுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |