சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இது குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் அபிநவ்யா பகிர்ந்து உள்ளார். அதில், மஞ்சள் உடையில் கை நிறைய வளையலுடன் அபிநவ்யா உற்சாகமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. அத்துடன், “என்னில் பாதியும் நான் காதலிப்பதில் பாதியும் உள்ள இதனை சந்திப்பதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இன்னும் சில நாட்களே உள்ளது. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கு எல்லாமே எல்லாமுமாக இருப்பாய்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram