தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 படங்கள் உள்ளது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘கில்லர்’ என்ற பேரில் உருவாக உள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ‘இசை’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.