Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… நாக சைதன்யாவுடன் மோதும் முன்னணி ஹீரோ ‌…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக இணைந்து இருக்க கூடிய திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. பவன் குமார் வழங்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.இந்த படத்தில் நாகைசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

இந்த கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படபிடிப்பில் அரவிந்த்சாமி இணைந்து இருக்கிறார். நாகசைதன்யா மற்றும் அரவிந்த்சாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமாக இருக்கும். இந்த படத்தின் மூலம் நடிகர் நாகசைதன்யா நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். அதனைப் போல இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். மேலும் இசையில் மேதைகளான தந்தை-மகன் இணை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.

 

Categories

Tech |