Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்…… குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். பிரீதி தேர்வு எழுதிய முதல் தடவ வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி நான்கு முறை, நிரஞ்சனி மூன்று முறை போராடி தேர்வாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ‌மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியது, எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள் ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மோகன் கார்த்திகேயன் ஆகியோரே நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன்.

நான் பிளஸ் டூ முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை. இதனால் இருக்கின்ற ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது மூன்று மகளும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகள் ப்ரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மற்றவர்கள் திருமணம் ஆகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் மூன்று பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர். எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. மகள் மூன்று பேரும் அரசு பள்ளியில் படித்தார்கள். மூத்த மகளும் மூன்றாவது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தினர். இரண்டாவது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். மூன்று மகள்கள் வீட்டில் இருந்து தான் காவலர் தேர்வுக்கு படித்தார்கள். எனது விவசாய நிலத்தில் மூன்று பேரும் ஓட்ட பயிற்சி எடுத்தார்கள்

Categories

Tech |