Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம், சிவில் சப்ளை கழக, வீட்டு வசதி வாரியம், ரப்பர் மற்றும் தோட்ட வாரியம், சர்க்கரை கழகம், சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 25% அளவில் போனஸ் மற்றும் கருணை தொகையாக அழித்திடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு உடனடியாக வெளியிட வேண்டும்.

அதிலும் அரசு விடுப்பு மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், விடுப்பு எடுக்க முடியாமல் பணிபுரிவது பாராட்டுக்குரியது. அதுமட்டுமில்லாமல் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் அவர்களின் குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இருப்பினும் பொருளாதார சிரமத்தை தாங்கிக் கொண்டு தங்களுக்கான பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். அவர்களின் மக்கள் பணி சிறப்புக்குரியது. கொரோனா காலத்தில் பணியாற்றுவது குறைவான போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பங்கள் தீபாவளி பண்டிகை வருவதால் அரசின் சார்பில் வழங்கப்படும் போனஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே தமிழக அரசு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனஸை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |