தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG Gloster காரை வாங்கி உள்ளனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்தார். அத்துடன், “வாழ்க்க முழுக்க நாம் நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா அது பெரிய அதிர்ஷ்டம். அப்படி நமக்கு கிடைத்த பொண்டாட்டியை கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடைச்சா” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த MG Gloster ரூ.32 லட்சத்து முதல் ரூ.42 லட்சம் வரை விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram