Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….:வாரிசு பட அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்?…. குஷியான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் விஜய் நடிக்க போகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் சத், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதை அம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி அன்று வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் தமன் உறுதி செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தீபாவளி என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வாரிசு படத்தின் சிங்கிள் குறித்து தான் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Categories

Tech |