Categories
பல்சுவை

அடடே! சூப்பர்…. வாட்ஸ் அப் வெளியிட்ட “கம்யூனிட்டிஸ்” வசதி…… இனி 1,024 பேர்…. பயனர்களுக்கு செம அப்டேட்….!!!

சமூக வலைதளத்தில் பலகாரம் அதிகம் விரும்பப்படும் whatsapp தனது பயணங்களில் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அவ்வபோது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் இனி புதிய கம்யூனிட்டிஸ் வசதி கொண்டிருக்கும். இதனை உலக அளவில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னால் Beta சோதனையில் இருந்த இந்த வசதி தற்போது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இனி குழுவாக 1024 பேர் மற்றும் 32 கொண்ட குரூப் வீடியோ காலிங் பேசலாம். இந்த புதிய வசதியை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸ்கேர்பேர்க் அறிவித்துள்ளார்.

இந்த கம்யூனிட்டிஸ் ஆப் இன்று அறிமுகம் செய்வதாகவும் இதன் மூலம் குழுவிற்காகவே சிறிய குழுக்கள் போன்ற பல வசதிகள் உள்ளது. மேலும் 32 பேர் அடங்கி வீடியோ காலிங் வசதியும் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குழுவிற்குள் தேர்தல் நடத்தவும் முடியும். இதில் குழுவிற்குள் உள்ள அனைவரும் அவர்களுக்கான வாக்கு செலுத்த முடியும். அதனைப் போல வசதி ஏற்கனவே Messenger மற்றும் டெலிகிராம் ஆகிய அப்களில் கொண்டு உள்ளது. இதனையடுத்து வணிகம் மற்றும் விளம்பரங்களுக்காக whatsapp பயன்படுத்துபவர்கள் இனி ஒரு மெசேஜ் 512 பேருக்கு அனுப்ப முடியும். இதற்கு முன்னால் 256 பேருக்கு அனுப்ப முடியும். இதன் போட்டியாளரான டெலிகிராம் இரண்டு லட்சம் வரை குழுவில் சேர்க்கும் வசதி கொண்டுள்ளது. ஆனால்வாட்ஸ் அப் போல End to End பாதுகாப்பு அதில் இல்லை.

Categories

Tech |