Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!… WhatsApp-ல் இவ்வளவு அப்டேட்டா?…. பயனர்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வாட்ஸ் அப் நிறுவனம் நடப்பு ஆண்டு பல புது வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றில் இருப்பதை போன்று தற்போது இப்போது வாட்ஸ்அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் (அ) ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம்.

இதையடுத்து உங்களது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி வாட்ஸ்அப்-ல் கிடைக்கிறது. இவற்றில் நீங்கள் முக்கியமான குறிப்புகள் (அ) மீடியாவை சேமிக்கலாம். இந்த சாட் லிஸ்டிலுள்ள முக்கியமான செய்திகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பார்க்க இயலும்.

அதன்பின் வாட்ஸ்அப் போல் அம்சமானது அதன் வாடிக்கையாளர்களை தனிப்பட்ட (அ) குழு சாட்களில் கேள்விகளை கேட்கவும், அதற்கான பதில்களை பெறவும் அனுமதிக்கிறது. ஒரு வாக்கெடுப்பில் ஒரு கேள்வியின் கீழ் பயனாளர்கள் 12 விருப்பங்களை சேர்க்கலாம். அதனை தொடர்ந்து லிங்குகளை உருவாக்கி அதன் வாயிலாக மற்றவர்களை உங்களுடைய அழைப்பில் இணைத்து கொள்ளகூடிய அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

Categories

Tech |