மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு விநியோகிக்க தொடங்கினார்.
இதனை அறிந்த அங்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் போண்டாவை முதல்வர் வழங்கினார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் முதல்வர் மம்தா பானர்ஜி எப்போதுமே சற்று இறுக்கமான முகத்துடன் காணப்படுவார். ஆனாலும் அவ்வப்போதும் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றொரு முகம் இதுபோன்று வெளிப்படும். அதனைப்போல சமீபத்தில் கூட கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை கலந்து கொண்டபோது மம்தா பானர்ஜி திடீரென தாக் எனும் இசைக்கருவியை வாங்கி இசைத்து காட்டி அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | West Bengal CM Mamata Banerjee stopped her convoy at a roadside tea stall and started serving pakoda to the people, in Jhargram. pic.twitter.com/2b3NKhXj5q
— ANI (@ANI) November 15, 2022