Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… தேவதர்ஷினியின் கணவரா இவர்?…. நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்பு…. வெளியான புரோமோ….!!!!

நகைச்சுவை காட்சிகளில் நடிக்க பலரும் முயற்சி செய்வர். எனினும் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு பெரிய அளவில் ரீச்சாகும். கடந்த 1998ஆம் வருடம் தேவதர்ஷினி தன் சினிமா பயணத்தை துவங்கி பின், மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்திபூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தார். இவர் முதல் முறையாக நடித்த திரைப்படம் எனில், அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம்தான். இதையடுத்து காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு என அடுத்தடுத்து அவர் நடித்தார்.

அதன்பின் சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட தேவதர்ஷினிக்கு, ஒரு மகள் இருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியாகிய 96 படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தேவதர்ஷினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக சேத்தன் கலந்துகொள்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின் அவரை பார்த்த ரசிகர்கள், சேத்தனா இது?.. என புரொமோவை பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |