Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. இது யாரு தர்ஷா குப்தாவா….? பூங்குழலியாக மாறிய போட்டோஸ் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பூங்குழலி வேடத்தில் மாறிய தர்ஷா குப்தா இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.

சின்னத்திரையில் முதல் முறையாக முள்ளும் மலரும் சீரியலில் காலடி எடுத்து வைத்து அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் பிஷியாக நடித்து வருபவர் தான் தர்ஷகுப்தா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் காலூன்றி தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டாலும் இவருக்கு நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அதனாலேயே நாட்கள் தவறாமல் இவர் போடும் போஸ்ட்டை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் இவர் பின்னாடியே சுற்றி கொண்டிருக்கிறது.

இவர் எப்போது போஸ்ட் போடுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவாகும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பிரபலங்களின் வேடத்தில் பலரும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோன்று தர்ஷா குப்தா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பூங்குழலி தோற்றத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |