Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு விற்பனையா…. அப்ப “வாரிசு” படம் வேற லெவலில் இருக்கும் போலயே….!!!!

நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”  திரைப்படத்தைக் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் நேரடி தமிழ் திரைப்படம் “வாரிசு”. இந்த  தமிழ் திரைப்படத்தை  தெலுங்கில் டப்பிங் தான் செய்கின்றோம் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு “ஸ்ட்ரைக்”  பிரச்சனையின் போது தெரிவித்திருந்தார். அதை அந்த திரைப்படத்தின் இயக்குனர் வம்சியும் தற்போது உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் பற்றிய ஒரு கணக்கு கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் சுற்றி வருகின்றது.

அது உண்மையா? பொய்யா? என்று தெரியாது whatsapp வதந்தியாக கூட இருக்கலாம். ஆனால் அந்த பெரிய கணக்கு இதுவரை விஜய் படங்களுக்கு நடக்காத ஒரு கணக்கு என்று சொல்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் தமிழக உரிமை மற்ற மாநில உரிமை என 200 கோடி வழியாக உள்ள மொழிகளில் ஓடிடி உரிமை 60 கோடி, சாட்டிலைட் உரிமை 50 கோடி, ஹிந்தி உரிமை 25 கோடி, வெளிநாட்டு உரிமை 50 கோடி, படத்தின் இசை உரிமை 10 கோடி என சுமார் 400 கோடி வரை நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் விஜய்யின் சம்பளம் 120 கோடி இதர செலவுகளுடன் சேர்த்து படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தியேட்டர்கள் உரிமை தவிர மற்ற உரிமைகளிலேயே போட்ட முதலீட்டை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார். அது போக “டேபிள் பிராபிட்” கிடைக்கும். அதற்கு மேல் படம் நன்றாக இருந்துவிட்டார் தியேட்டர்கள் வசூல் மூலம் கிடைப்பது கூடுதல் லாபமாக இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். விஜய்யை வைத்து இதுவரையில் வியாபாரம் செய்த தமிழ் தயாரிப்பாளர்களை காட்டிலும் தெலுங்கில் தான் இதற்கு முன்பு தயாரித்த தெலுங்கு படங்களை காட்டிலும் இந்த “வாரிசு” திரைப்படம் மூலம் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அதிக லாபத்தை பெரும் வாய்ப்பு இருக்கிறதாம். மேலும் தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சுற்றி வரும் இந்த கணக்கு உண்மையா? பொய்யா? என்பது விரைவில் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |