தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராசன் பட்டம் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுடி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் படுகாயமடைந்துள்ளார்.
அதன்பின் அருகிலிருந்தவர்கள் சாமுடியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாமுடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.