அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை தெருவில் நெல் வியாபாரியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் தியாகத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்திற்காக சென்றுள்ளார். அப்போது திருமலை பிரிவு சாலை அருகாமையில் சென்ற நிலையில் தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து சங்கரின் மனைவி அம்சா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.