Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது.

அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகளிலிருந்த கப்பலை தடுத்து நிறுத்தியுள்ளன. பின்னர் அதிலிருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்துள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர். மேலும் நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ள தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |