பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பிரச்சினை நாடு முழுவதும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம், லோலாவைக் கொடூரமாக கொலை செய்த Dahbia B என்னும் இளம்பெண், ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்பது தான். ஆகத்து மாதம் 20ஆம் தேதி, அல்ஜீரியா நட்டவரான Dahbia, பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரது குடியிருப்பு அனுமதி காலாவதியாகியிருந்ததுதான் அதற்குக் காரணம். ஆறு ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்திருந்த மாணவியாகிய Dahbiaவை ஒரு மாதத்திற்குள் பிரான்சிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டிருந்திருக்கிறது. அவர் குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல என்பதால், அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. இதற்கிடையில், லோலா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் லோலாவின் பெற்றோரை சந்தித்து இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு முழு ஆதரவும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் லோலா குடும்பத்தை அரசு கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளன. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுந்த விவாதத்தின் போது வலது சாரி National Rally கட்சியைச் சார்ந்த Marine Le Pen, அரசின் கட்டுப்பாடற்ற புலம்பெயர்தல் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இந்த மனிதத்தன்மையற்ற செயலைச் செய்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் பிரான்சில் இருந்திருக்கவே கூடாது, இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற முறைகேடான புலம்பெயர்தல் அமைப்புக்கு தடை விதிப்பதிலிருந்து உங்களை தடுப்பது என்ன என்று கேள்வி எழுப்பினார். பின்னர் கைது செய்யப்பட்டுள்ள Dahbia, கொலை செய்யப்பட்ட லோலாவின் குடும்பம் வாழ்ந்துவந்த அதே கட்டிடத்தில்தான் தங்கியிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.