அரியானா மாநிலம் குருகிராம் அருகில் சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கும் போது நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் தடயங்கள் மற்றும் சிசிடிவிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிசிடிவி கேமராவில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர் காவல்துறையை விசாரணை மேற்கொண்டர். அப்போதுதான் அங்குள்ள சீர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்து ஒரு நபர் சவாரிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக சர்ஹவுல் கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரித்ததில் தான் உண்மை தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறியது, 22 வயதான ராகுலுக்கும் 20 வயதான பிரியங்காவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளர்களை வேலை செய்து வருகிறார். ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுக்கே சரியாக உள்ள நிலையில், பிரியங்கா கணவரிடம் செல்போன், டிவி, பிரிட்ஜ், வேண்டும் என நச்சரித்து அடிக்கடி சண்டை போட்டு உள்ளார். மேலும் கோபத்தில் பலமுறை கணவர் அறைந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு சண்டை முற்றி அடிதடியானதில் கணவர் ராகுல் மனைவி பிரியங்காவை அடித்து கொலை செய்துள்ளார். இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்து குழந்தையோட பொழுது கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி வந்துள்ளார். அதன் பிறகு மனைவியின் உடைகளை கலைந்து நிர்வாணமாக வைத்துள்ளார் .அதுமட்டுமில்லாமல் மனைவியின் கையில் கணவர் ராகுலின் பெயர் பச்சை குத்தியிருந்தால் அந்த பகுதி சதையை கத்தியால் கிழித்து நீக்கி உள்ளார். அதன் பிறகு ஆட்டோ பிடித்து ஏறி யாரும் இல்லாத இடத்தில் சத்தம் இல்லாமல் வைத்துவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.