Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. இறந்த சிறுமியை தோளிலேயே தூக்கிச் சென்ற நபர்….. நெஞ்சை உலுக்க வைக்கும் வீடியோ….!!!

மத்திய பிரதேசம் சத்தருப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அந்த நபர் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டு செல்லவும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் தோளிலேயே தூக்கிக்கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்று டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத அந்த நபருக்கு சகபயணி ஒருவர் உதவியுள்ளார்.

மனதில் துக்கத்தையும் தோளில் பிணத்தையும் சுமந்து அந்த நபர் விரைவில் பயணித்த காட்சி பார்வையாளர்களை கலங்க வைத்துள்ளது. இதனையடுத்து சத்தர்புர் மாவட்டத்தில்கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது குழந்தையை குடும்பத்தார் தோளில் தூக்கி சென்ற சம்பவம் இணையதளங்களில் வைரலானதையடுத்து அதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அந்த மாவட்டத்தில் அவசர தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை காட்டுவதாக சமூக ஊடகங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Categories

Tech |