உத்திரபிரதேசம் கான்பூர் பகுதியில் 10 வயது சிறுவன் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த மாவட்டத்தின் சிறுவர் நீதிமன்ற குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தந்தை தெரிவித்த தகவலின்படி, சிறுமி தற்போது 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்று தெரிகிறது.சிறுமி தனது அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளியே சென்ற சிறுமியின் தாய், தந்தை வீடு திரும்பிய போது சிறுமி அழுது கொண்டிருந்தார்.
அப்போது பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கும் போது சிறுமியின் குற்ற சம்பவம் குறித்து தகவல் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுயின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் சிறுவனின் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டது. அப்போது சிறுவன் தனது மொபைலில் ஆபாச படம் பார்த்ததும். அதன் பிறகு சிறுமியிடம் அத்துமீறியதையும் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 10 வயது சிறுவன் ஒருவன் பாலியல் கொடுமை குற்றத்தை செய்திருப்பது அதன் பின்னணியாக மொபைல் போன் இருந்ததாக குறிப்பிட்டியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.