Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடம்பிடிக்கும் பாண்டியா….! கடும் கோபத்தில் பிசிசிஐ …. காரணம் என்ன ….?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து போட்டியில் விளையாடாமல் இருப்பதால் பாண்டியா மீது பிசிசிஐ  கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் முன்பு போல் ஹர்டிக் பண்டியா விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டது .இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாண்டியா தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் எனஇரண்டிலும்  முழு ஃபார்முக்கு திரும்ப பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சி மேற்கொண்டு வருகிறார் .இதன் காரணமாக நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும்  இந்திய அணியில் என்னைத் தேர்வு செய்ய வேண்டாம் என ஹர்திக் பாண்டியா பிசிசிஐக்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என ஹர்திக் பாண்டியா தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் முன்பு போன்று பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என எனக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என அவர் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் ,வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ள நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா தொடர்ந்து விளையாட மறுப்பது பிசிசிஐ அதிகாரிகளுக்கு இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா கட்டாயம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் பங்குபெற்று திறமையை நிரூபிக்க வேண்டும் அப்படி இல்லையெனில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து அவருடைய பெயரை  நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |