இமாச்சல மாநிலத்தில் முதல்வர் ஜெயராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் வரிந்து கட்டி வருகிறது. 740 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாள் செய்துள்ளனர். சிறிய மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருந்தாலும், இங்கு கோடிகளில் புரல்கிற வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது தேர்தல் அரசியல் களத்தை அதிர வைக்கிறது. இங்கு போட்டியில் இறங்கிள்ள வேட்பாளர்கள் ஐந்து பேர் பெரும் பணக்காரர்கள் அவர்களில் ஒருவர் பாஜக, மீத நான்கு பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். முதலில் சோபால் தொகுதியில் பாஜக சார்பில் களம் இறங்கிய நடப்பு எம்எல்ஏவும் கட்டுமான தொழில் அதிபரும் ஆப்பிள் விவசாயமான பல்வீர் வருமா என்ற பிட்டுதான் மிகப் பெரிய பணக்கார வேட்பாளர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ.125 கோடி ஆகும். இவருக்கு ரூ.4.31 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.121.40 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. மெர்சிடஸ்பெனஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சொகுசு கார்களின் சொந்தக்கார ஆவர். நாக்ரோட்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதன்முதலாக தேர்தலில் களம் இறங்கிய ரகுவீர் சிங் பாலி. இவர் இரண்டாவது பெரிய வேட்பாளர். இவரது தந்தை ஜி.எஸ். பாலி முன்னாள் மந்திரி ஆவார். ரகுபீர் சிங் பாலிக்கு ரூ.104 கோடி சொத்துக்கள் உள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.13.07 கோடி அசையா மதிப்பு ரூ.90.34 கோடி. மெர்சிடஸ்பென்ஸ் கார் இவருக்கும் உள்ளது.
அதனை தொடர்ந்து மூன்றாவதாக 6 முறை முதல்வர் பதவி வகித்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் மூன்றாவது பெரிய பணக்காரர் அவர். இரண்டாவது முறையாக காங்கிரஸ் தேர்தலில் நிற்கிறார். சிம்லா ஊரகப்பகுதியில் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.102 கோடி. அசையா சொத்துக்கள் ரூ.90.34 கோடி, அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.6.97 கோடி. இவரது மனைவி அரச குடும்பத்தை சேர்ந்த ராஜகுமாரி சுதர்சன் தேவி ஆவார். அதன் பிறகு நான்காவதாக சோபால் தொகுதியில் பாஜகவின் பல்வீர் வர்மா என்ற பிட்டுவை எதிர்த்து களம் இறங்கி உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ரஜ்னீஷ் கம்டா 4 வது பணக்காரர் ஆவார். முதல் முறையாக தேர்தலில் நிற்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.31.25 கோடி. இவரிடமும் மெர்சிடஸ்பென்ஸ் உள்ளிட்ட சொகுசு காரர்கள் உள்ளது. இவரிடமும் இவரது மனைவிடம் சேர்ந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளது. 5 வது பெரிய பணக்கார வேட்பாளர் ஆஷிஷ் புட்டெயில் ஆவார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.பி.எல்.புட்டெயிலின் மகன் ஆவார். பாலம்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் இவரது சொத்து மதிப்பு ரூ.30.25 கோடி அசையும். அதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.69 லட்சம், அசையா சொத்து ரூ.63 லட்சம். மேலும் மனைவியின் சொத்து மதிப்பு 1.66 கோடி, ரூ.27 கோடி பரம்பரை சொத்து உள்ளது. இவர்கள் 5 பேரும் இந்த மாநிலத்தின் தேர்தல் களத்தை கலக்கி வருகிறார்கள்.