Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…. வெளிநாட்டவருக்கும்… தீவிரவாதிக்கும் வித்தியாசம் தெரியலையா…? காவல்துறை கிண்டல்…!!

காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள்  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் இரண்டு பேரை தீவிரவாதிகள் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள்  விசாரணை நடத்தியதில், பல புகைப்படங்களில் உள்ளவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த இருவரும் காஞ்சிபுர காமாட்சியம்மன் கோவிலை  சுற்றிப் பார்க்கச் சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் தீவிரவாதி இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |