செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்னைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது பொதுக்குழுக்கு போகாமல், குண்டர்கள் படையோடு போனாரு இன்றைக்கு சிபிசிஐடி கேஸ் போட்டு இருக்கு. அப்போ குற்றம் பண்ணி இருக்கிறதா தானே அர்த்தம். நாங்க நீதிமன்றத்துக்கு போன பின்பு தானே, இவ்வளவு வெளி வருது.
அதனால இன்னைக்கு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர் ஓபிஎஸ். கட்சியை கூட காட்டிக் கொடுக்க தயங்காதவர் ஓபிஎஸ். அதனாலதான் அன்னைக்கு பொதுக்குழு கூட்டத்து வாராமல் குண்டர்களோடு வந்தாரு, தலைமை கழகம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை எல்லாருடைய கோவில் அது. அந்த திருக்கோவிலை எட்டி உதைத்ததை பார்க்கும் போது கண்ணுல தண்ணீர் வந்துட்டு, இதயம் கசிந்துட்டு, அப்படி மனம் கஷ்டப்படுகின்ற நிலைமை.
வரலாற்றில் 1972ல் ஆரம்பிச்ச இந்த இயக்கத்தில் பல காலம் ஓடி, இதுவரை அந்த மாதிரி ஒரு கருப்பு வரலாறு, ஒரு கருப்பு அஸ்திரத்தை இந்த மாதிரி ஓபிஎஸ் செயல்பட்டது வரலாறும் மன்னிக்காது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எந்த தொண்டனும் நிச்சயமாக மன்னிக்க மாட்டான் என தெரிவித்தார்.