புதுவையில் ரெட்டியார் பாளையம் செல்லப்பாபு நகரில் வசித்து வருபவர் வின்னி பிரிசில்லா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் அடையாளம் தெரியாத 2 பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இருவரும், வின்னி பிரிசில்லா தாக்கி அவரது கழுத்தில் இருந்த 13 சவரன் தங்க தாலி செயினை பறித்துள்ளனர். இதுபற்றி பின்னி பிரிசில்லாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 1 மாதமாக சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் உழவர்கரை பகுதியில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சிசிடிவியில் பதிவான வாகனத்தை போல் வந்த ஒரு பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், ரெட்டியார்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது தற்போது வீடுபுகுந்து செயின் பறித்த சம்பவத்தில் இருவர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.