Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா.! 100 ரூபாய் தர மறுத்ததால்… அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் … சென்னையில் பரபரப்பு…!!!

100 ரூபாய் தர மறுத்ததால் லிப்டு கொடுத்த வாலிபரை ஒருவர்  அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள வளர்மதி நகரில் ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்துபோன வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்து போன வாலிபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சங்கர் என்றும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் என்றும் தெரியவந்தது.

அதாவது சம்பவம் நடைபெற்ற அன்று  சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் சசிக்குமார் என்பவர் சங்கரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அதற்கு சங்கர் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்லி தனது மோட்டார் சைக்கிளில் சசிக்குமாரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் சசிக்குமார் திடீரென்று வண்டியை நிறுத்த சொல்லி நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது என்று கூறியுள்ளார். அதனால் சங்கர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர் இறங்கிய உடன் தனது வண்டியை  எடுக்கும் போது உடனே சசிகுமார் அவரிடம்  எனது வண்டி பெட்ரோல் இல்லாமல் வழியில் நின்று விட்டதால் தனக்கு  நூறு ரூபாய் வேண்டுமென்று சங்கரிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து சங்கர் எனது பைக்கில் லிப்டு கொடுத்து வந்ததற்கு 100 ரூபாய் தர வேண்டுமா? என்று சங்கர் கூறி பணத்தை தரமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த சசிக்குமார் சங்கரை அடித்து கொலை செய்துவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்து 100ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டு 100ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |