பிரபல நடிகர் அதர்வா தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அதர்வாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகர் அதர்வா தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அதிலிருந்து மீண்டு வர வேண்டும். அதோடு நலமுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.