‘குருதி ஆட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதர்வா வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ராக் போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
https://twitter.com/Atharvaamurali/status/1462417060026146818