அதர்வாவின் “நிறங்கள் மூன்று” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாறன்”. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது தொடர்பாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக பிரபல நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குகிறார்.
“நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், ரகுமான், ஜான் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் இப்படப்பிடிப்பு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Here is Pooja still of #NirangalMoondru starring @Atharvaamurali, @realsarathkumar & @actorrahman. Shooting starts from today!
A @karthicknaren_M Film 🙌 @ManojBeno @DoneChannel1 @idiamondbabu pic.twitter.com/Gd73N8ZqHK
— Ayngaran International (@Ayngaran_offl) January 5, 2022