பிரபல நடிகர் அதர்வா முரளியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஸ்ருதி நல்லப்பா தயாரிப்பில் முன்னணி நடிகர் அதர்வா முரளியின் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சாம் ஆண்டன் கூறியதாவது, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தபோது தயாரிப்பு நிறுவனம் பணிகளைத் தொடங்க தயங்கி நின்றது.
ஆனால் குழுவாக சேர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டு மிகச் சிறந்த முறையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார். அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் டைட்டில், இசை, ட்ரைலர், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.