கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
கேடு விளைவிக்கும் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது தென் மாவட்டங்களில் பிரபலம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப்புற மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அதிக அளவில் கருப்பட்டி தான் பயன்படுத்துகிறார்கள். இன்றும்கூட நகர்ப்புறங்களில் இருக்கும் பலருக்கு கருப்பட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லை. சீனியை சேர்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கருப்பட்டி இனிப்பு மட்டுமல்ல ஒரு அற்புதமான இயற்கையான மருந்தாகவும் அமைகிறது.
இதன் நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக கருப்பட்டி எங்கு கிடைக்கும் என்று நாம் வாங்கி விடுவோம். வேறு எந்த உணவு பொருளையும் இல்லாத நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் இதில் உள்ளது. அதிலும் பெண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த விளங்குகிறது. கிராமத்து பாட்டிகள் இன்றும் ஆரோக்கியமாக உடல் வலிமையுடன் இருப்பதற்கு காரணம் இந்த கருப்பட்டி தான் என்று உங்களால் நம்ப முடியுமா…?? ஒவ்வொரு அங்குலமும் அற்புதமான பலன் கொண்டது பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சி தான் கருப்பட்டி செய்யப்படுகிறது.
இதனுடைய சுவையும் மணமும் நமக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இதனுடைய மருத்துவ குணங்களை நன்கு அறிந்த கிராமத்து மக்கள் இதனை ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதுதான் அவர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை தூண்டும் சக்தி கருப்பட்டிக்கு உண்டு. வயது வந்த பெண்களுக்கு உளுத்தம் பருப்போடு கருப்பட்டி சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். இதுதான் அவர்களின் இடுப்பு எலும்பு மற்றும் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது.
இதன் விளைவாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலிக்கு சிறிது கருப்பட்டி சாப்பிட்டாலே போதும் வயிற்று வலி குணமாகிவிடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி எடுத்து வந்தால் சர்க்கரை அளவு சீராகும். கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் பலகாரங்களை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். நாட்பட்ட சளி வறட்டு இருமலால் அவதிப்படுபவர்கள் குப்பைமேனி இலையோடு கருப்பட்டி சேர்த்து வதக்கி சாப்பிட்டால் சளி முழுவதுமாக வெளியேறிவிடும்.
வாயு தொல்லை உடையவர்கள் ஓமத்தோடு கருப்பட்டி சேர்த்து சாப்பிடவேண்டும். இது உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். ஆண்மை குறைவு என்பது பல ஆண்களுக்கும் தற்போது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு கருப்பட்டி சிறந்த தீர்வு அளிக்கிறது. பசி எடுக்க வில்லை என கூறுபவர்கள் கருப்பட்டி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து பொடியாக சாப்பிடலாம். இது பசியுணர்வைத் தூண்டும். எனவே கேடு தரும் வெள்ளை சர்க்கரையை எடுக்காமல் ஆரோக்கியம் தரும் கருப்பட்டிக்கு மாறுவோம்.