Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. “செல்ஃபி வித் குல்ஃபி”…. புதிய முயற்சியில் இறங்கிய ஆவின்….. இணையத்தில் வைரலாகும் பிரச்சாரம்….!!!!

தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனம் கிராம அளவில் லச்சனக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி, பொங்கல் பண்டிகையை நாட்களில் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்க அரசு தலைமை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி விற்பனை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய திட்டத்தில் ஆவின் நிர்வாகம் இறங்கி உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆவின் குல்ஃபி சாப்பிட்டுக்கொண்டே செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்யுமாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ‘செல்ஃபி வித் ஆவின் குல்பி’ என்ற இந்த பிரச்சாரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நிறைய பேர் இதற்காக ஆவின் குல்பி வாங்கி அதனுடன் செல்பி எடுத்து போஸ்ட் செய்து வருகின்றனர். ஆவின் குல்ஃபி விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த முயற்சியில் ஆவின் இறங்கியுள்ளது.

Categories

Tech |