தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் இந்தி நடிகையுமான ஜான்விகபூரும் நெருங்கிய தோழிகள் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை ஜான்வியும், ஜான்வி படங்களை கீர்த்தி சுரேசும் உடனுக்குடன் பார்த்து ஒருவரை ஒருவர் பாராட்டுவார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் கீர்த்தி சுரேசும் ஜான்வி கபூரும் எதிர்பாராத விதமாக திடீரென சந்தித்துக் கொண்டனர். உடனே ஜான்வியை கீர்த்தி சுரேஷ் கட்டி அணைத்தபடி அவரோடு செல்ஃபி எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலுடன் மாமன்னன், ஜெயம் ரவியுடன் சைரன், தெலுங்கில் சிரஞ்சீவியின் ‘போலோ சங்கர்’, நானியுடன் தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.