Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கோவையில் பழுதடைந்த சாலைகள் எப்போது சீரமைக்கப்படும்?…. அமைச்சர் கூறிய அசத்தல் தகவல்….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு முதல்நிepothu லை கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மழையில் பாதிப்பு வரக்கூடாது என பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கடந்த ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 32 கால்வாய்கள் பணிகள் முடக்கப்பட்டது. இதனால் மழைநீர் தேங்காாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிக மழையிலும் பாதிப்பு இல்லை. மோட்டார்கள் தயாராக உள்ளது. பாதிக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. எந்த இடங்களிலும் மின்சார பாதிப்பு இல்லை. 11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மின் திட்டங்கள் செயல்படுத்தவில்லை. தற்போது தான் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது. சிறுகுறு தொழில் நடத்த இந்தியாவிலே தமிழகத்தில் மிகக் குறைந்த மின் கட்டணம். அதனைத் தொடர்ந்து சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித சாலையும் போடப்படவில்லை. நிதி 200 கோடியில் 26 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும். மேலும் கோவையில் பள்ளியில் மாணவர்கள் குறிப்பேட்டில் சாதி குறித்து இடம் வைத்திருந்த பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு வந்த பிறகு கல்வித் துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |