கடலுக்கடியில் உள்ள திமிங்கல கல்லறைகளை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
அலெக்ஸ் டாசன் எனும் சுவீ டன் நாட்டு புகைப்படக்கலைஞர், அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் எடுத்த திமிங்கல கல்லறையின் புகைப்படம் ”ஸ்கூபா டைவிங் 20222” புகைப்பட போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது.
கிரீன்லாந்தில் இருக்கும் தாசிலாக் வளைகுடாவில் உள்ளுரை சேர்ந்த இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரித்து வருகின்றனர். சடலம் உதிர்ந்த பின்னர் இருக்கும் எலும்புக்கூடுகள் அங்குள்ள கடலில் வீசப்படுகிறது. கடலுக்கடியில் மூன்று அடி நிரம்பிய பனிக்கட்டிக்குள் இருக்கும் திமிங்கல சடலங்களின் புகைப்படத்தை தான் அலெக்ஸ் டாசன் குழு எடுத்தது.
இந்தப் படம் தான் தற்போது ”ஸ்கூபா டைவிங் 20222” என்ற புகைப்பட போட்டியில் பரந்த கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற பிரிவில் விருதை தட்டிச் சென்றது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அலெக்ஸ் டாசன், ஸ்கூபா டைவிங் இதழ் எனது படத்தை வெற்றி படமாக தேர்வு செய்துள்ளதில் நான் பெருமை அடைகிறேன் என பதிவிட்டு, அவர் கேமராவில் எடுத்த திமிங்கல கல்லறை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.