அடிலெய்ட் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
‘அடிலெய்ட் 2022 இண்டர்நேஷனல்’ டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது .இதில் இன்று நடந்த போட்டியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, 100-வது இடத்தில் இருக்கும் சோல்வேனியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காஜா ஜுவான் உடன் மோதினார்.
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே காஜா ஜுவான் முன்னிலையில் இருந்த வந்தார். இறுதியாக 7-6 (8/6), 6-1 என்ற செட் கணக்கில் காஜா ஜுவான் வெற்றி பெற்றார். இதனால் 100-வது இடத்திலிருக்கும் வீராங்கனையிடம் முன்னணி வீராங்கனை சபலென்கா தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Roaring into the quarterfinals 💥
Kaja Juvan knocks out the No.2 seed Sabalenka 7-6(6), 6-1!#AdelaideTennis pic.twitter.com/HVrU9mBNuz
— wta (@WTA) January 5, 2022